ழூல் வேர்ண் (விண்கலம்)
![]() ழூல் வேர்ண் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அண்மிக்கிறது | |
இயக்குபவர் | ஈசா |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | EADS Astrium, Thales Alenia Space |
திட்ட வகை | அ.வி.நிக்கு சரக்கு அனுப்புதல் |
செயற்கைக்கோள் | பூமி |
ஏவப்பட்ட நாள் | 04:03 UTC, மார்ச் 9, 2008 |
ஏவிய விறிசு | ஆரியான் 5 |
திட்டக் காலம் | 5 மாதங்கள் |
தே.வி.அ.த.மை எண் | 2008-008A |
இணைய தளம் | ஈசா - ATV |
நிறை | 20 தொன், (44,000 இறா) |
திறன் | சூரிய ஆற்றல் |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
வான்வெளி கோளப்பாதை | Low Earth orbit |
சாய்வு | 51.6° |
சேய்மைநிலை | 339 கிமீ (183.045356217 nmi) |
அண்மைநிலை | 331 கிமீ (178.725701793 nmi) |
சுற்றுக்காலம் | 91.34 |
ழூல் வேர்ண் (ஜூல்ஸ் வேர்ண், Jules Verne ATV), என்பது ஐரோப்பாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் ஆகும். பிரெஞ்சு அறிவியல் புதின எழுத்தாளர் ழூல் வேர்ண் என்பவரின் நினைவாக இவ்விண்கலத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது[1]. இது மார்ச் 9, 2008 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. இதில் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் (அவிநி) தங்கியுள்ள வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், உடைகள் மற்றும் விண்வெளி மையத்துக்கு தேவையான 5 தொன் பொருட்கள் அனுப்பப்பட்டன.
இதுவே முதலாவது ஆளில்லா சரக்கு விண்கலமாதலால், இவ்விண்கலம் மூன்று வாரங்கள் சோதிக்கப்பட்டே அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. அவிநி உடன் இது ஏப்ரல் 3, 2008 இல் வெற்றிகரம���க இணைந்தது. நான்கு மாதங்கள் வரை இது விண்வெளி நிலையத்துடன் இணைந்திருந்த பின்னர் அங்கிருந்து விடுபட்டு பூமியின் வளிமண்டலத்தினுள் பிரவேசித்து பசிபிக் பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.